Tuesday, February 15, 2011

கிரிக்கட் உலகக் கிண்ண மாற்றங்கள்...

உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி வருகிற 19ம் திகதி ஆரம்பமாக இருக்கிறது. இந்த போட்டிகள் புதிய கோணத்தில் புதிய பரிணாமத்தில் நடாத்தப்பட இருக்கின்றது கடந்த கால உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் எவ்வாறு நடந்த்தது தெரியுமா?
முதல் மூன்று உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் 60 ஓவர் இன்னிங்ஸ்களிலே விளையாடப்பட்டது. அது மட்டுமல்லாமல் 1987 வரையான காலப்பகுதி வரை சிகப்பு நிற பந்தினாலேயே இந்த உலகக்கிண்ண போட்டிகள் நடாத்தப்பட்டது.
30 யார்ட் சுற்றளவு கொண்ட கிரிக்கட் மைதான அமைப்பு முறை 1983 ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப் பட்டது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு முறையும் இந்த உலகக்கிண்ண போட்டிகள் சந்தித்து வந்த புதுமைகள் மாற்றங்கள் என்பன கீழே தெளிவாக தரப்பட்டிருக்கிறது.

1975 ம் ஆண்டு நடாந்த உலகக்கிண்ணம்

பங்குபற்றிய அணிகள் - 8
வெற்றி பெற்ற அணி - மேற்கிந்திய தீவுகள்.
போட்டிகள் நடாத்திய நாட்கள் - 15
போட்டி முறை - இரண்டு குழுக்கள் அதில் வெற்றி பெற்ற குழு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
உடை - வெள்ளை நிறம்
மொத்த ஓவர் - 60
ஆகக் கூடிய ஓட்டம் - 334/4 (இந்தியா vs இங்கிலாந்து) - குழு A 
ஆகக்குறைந்த ஓட்டம் - 86 (இலங்கை vs மேற்கிந்திய தீவுகள்) குழு - B 
பதிந்த நிகழ்வு - டென்னிஸ் அமிஸ் 147 பந்துகளில் 137 ஓட்டம் பெற்று உலகக் கிண்ண கோப்பைகளில் முதலாவது செஞ்சரி எடுத்தார்.

1979 ம் ஆண்டு நடாந்த உலகக்கிண்ணம்

பங்குபற்றிய அணிகள் - 8
வெற்றி பெற்ற அணி - மேற்கிந்திய தீவுகள்.
போட்டிகள் நடாத்திய நாட்கள் - 15
போட்டி முறை - இரண்டு குழுக்கள் அதில் வெற்றி பெற்ற குழு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
உடை - வெள்ளை நிறம்
மொத்த ஓவர் - 60
ஆகக் கூடிய ஓட்டம் - 286/9 (மேற்கிந்திய தீவுகள் vs இங்கிலாந்து) 
ஆகக்குறைந்த ஓட்டம் - 45 (கனடா vs இங்கிலாந்து) குழு - A
பதிந்த நிகழ்வு - விவான் ரிச்சர்ட்ஸ் 138 ஓட்டம் பெற்று செஞ்சரி எடுத்தார்.


1983 ம் ஆண்டு நடாந்த உலகக்கிண்ணம்

பங்குபற்றிய அணிகள் - 8
வெற்றி பெற்ற அணி - இந்தியா.
போட்டிகள் நடாத்திய நாட்கள் - 17
போட்டி முறை - இரண்டு குழுக்கள் அதில் வெற்றி பெற்ற குழு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
உடை - வெள்ளை நிறம்
மொத்த ஓவர் - 60
மாற்றம் - 30 யார்ட் மைதானம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆகக் கூடிய ஓட்டம் - 338/5 (பாகிஸ்தான் vs இலங்கை) - குழு A 
ஆகக்குறைந்த ஓட்டம் - 136 (இலங்கை vs இங்கிலாந்து) குழு - A  


  1987 ம் ஆண்டு நடாந்த உலகக்கிண்ணம்

பங்குபற்றிய அணிகள் - 8
வெற்றி பெற்ற அணி - ஆஸ்ட்ரேலியா.
போட்டிகள் நடாத்திய நாட்கள் - 31
போட்டி முறை - இரண்டு குழுக்கள் அதில் வெற்றி பெற்ற குழு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
உடை - வெள்ளை நிறம்
மொத்த ஓவர் - 50
மாற்றம் - 60 ஓவர் 50 ஆக குறைக்கப்பட்டது.
ஆகக் கூடிய ஓட்டம் - 360/4 (மேற்கிந்திய தீவுகள் vs இலங்கை) - குழு -  B 
ஆகக்குறைந்த ஓட்டம் - 135 (சிம்பாப்வே vs இந்தியா) குழு - A 
பதிந்த நிகழ்வு - உலகக்கிண்ண கோப்பை போட்டிகளில் முதன்முதலாக இந்தியாவை சேர்ந்த செடான் ஷர்மா ஹாட் ட்ரிக் முறையில் மூன்று பேரை தொடராக அதிரடியாக ஆட்டமிழக்க செய்தார்.

1992 ம் ஆண்டு நடாந்த உலகக்கிண்ணம்

பங்குபற்றிய அணிகள் - 9
வெற்றி பெற்ற அணி - பாக்கிஸ்தான் 
போட்டிகள் நடாத்திய நாட்கள் - 32
போட்டி முறை - எல்லா அணிகளும் ஒருமுறை ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு இறுதியில் தெரிவான 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.
உடை - வர்ண நிறம் அந்தந்த அணிகளுக்கு ஏற்ப.
மொத்த ஓவர் - 50
மாற்றம் - முதல் பதினைந்து ஓவர்களுக்கு 2 பீல்டர்ஸ் மட்டுமே 30 யார்ட் வலயத்தினுள் அனுமதிக்கப்பட்டார்கள்.
அது மட்டும் இல்லாமல் இரவு பகல் ஆட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆகக் கூடிய ஓட்டம் - 313/7 (இலங்கை vs ஜிம்பாப்வே) 
ஆகக்குறைந்த ஓட்டம் - 74 (பாகிஸ்தான் vs இங்கிலாந்து) 
பதிந்த நிகழ்வு - தென் ஆபிரிக்கா உலகக்கிண்ண போட்டிகளில் இணைந்து கொண்டது.

1996 ம் ஆண்டு நடாந்த உலகக்கிண்ணம்

பங்குபற்றிய அணிகள் - 12
வெற்றி பெற்ற அணி - இலங்கை  
போட்டிகள் நடாத்திய நாட்கள் - 33
போட்டி முறை - இரண்டு குழுக்கள் போட்டியிட்டு இறுதியில் தெரிவான 4 அணிகள் கால் இறுதிக்கு முன்னேறியது.
உடை - வர்ண நிறம் அந்தந்த அணிகளுக்கு ஏற்ப.
மொத்த ஓவர் - 50
மாற்றம் - கால் இறுதிப் போட்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆகக் கூடிய ஓட்டம் - 398/5 (இலங்கை vs கென்யா) குழு - A 
ஆகக்குறைந்த ஓட்டம் - 93 (மேற்கிந்திய தீவுகள் vs கென்யா) குழு - A  
பதிந்த நிகழ்வு - இலங்கை அணி முதல் பதினைந்து ஓவேர்களில் 100 ஓட்டங்களை தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் பெற்றுக்கொண்டது.
அரவிந்த D சில்வா அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகளின் ஆட்ட நாயகனாக தெரிவானார்.

1999 ம் ஆண்டு நடாந்த உலகக்கிண்ணம்

பங்குபற்றிய அணிகள் - 12
வெற்றி பெற்ற அணி - ஆஸ்ட்ரேலியா
போட்டிகள் நடாத்திய நாட்கள் - 38
போட்டி முறை - இரண்டு குழுக்கள் போட்டியிட்டு தெரிவான மூன்று அணிகள் சூப்பர் சிக்ஸ் குழுக்குள் தெரிவாகி அதிலிருந்து தெரிவான 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது.
உடை - வர்ண நிறம் அந்தந்த அணிகளுக்கு ஏற்ப.
மொத்த ஓவர் - 50
மாற்றம் - சூப்பர் சிக்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆகக் கூடிய ஓட்டம் - 373/6 (இந்தியா vs இலங்கை) குழு - A 
ஆகக்குறைந்த ஓட்டம் - 68 (ஸ்காட்லாண்ட் vs மேற்கிந்திய தீவுகள்) குழு - B   

2003 ம் ஆண்டு நடாந்த உலகக்கிண்ணம்

பங்குபற்றிய அணிகள் - 14
வெற்றி பெற்ற அணி - ஆஸ்ட்ரேலியா 
போட்டிகள் நடாத்திய நாட்கள் - 43
போட்டி முறை - இரண்டு குழுக்கள் போட்டியிட்டு தெரிவான மூன்று அணிகள் சூப்பர் சிக்ஸ் குழுக்குள் தெரிவாகி அதிலிருந்து தெரிவான 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது.
உடை - வர்ண நிறம் அந்தந்த அணிகளுக்கு ஏற்ப.
மொத்த ஓவர் - 50
மாற்றம் - N/A.
ஆகக் கூடிய ஓட்டம் - 359/2 (ஆஸ்ட்ரேலியா vs இந்தியா) - இறுதிப்போட்டி 
ஆகக்குறைந்த ஓட்டம் - 36 (கனடா vs இலங்கை) குழு - B   
பதிந்த நிகழ்வு - ரிக்கி பொன்டிங் 121 பந்துகளுக்கு 146 ஓட்டங்களை பெற்றார்.

2007 ம் ஆண்டு நடாந்த உலகக்கிண்ணம்

பங்குபற்றிய அணிகள் - 16
வெற்றி பெற்ற அணி - ஆஸ்ட்ரேலியா 
போட்டிகள் நடாத்திய நாட்கள் - 47
போட்டி முறை - 4 குழுக்கள் போட்டியிட்டு தெரிவான 4 அணிகள் சூப்பர் 8 குழுக்குள் தெரிவாகி அதிலிருந்து தெரிவான 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது.
மாற்றம் - சூப்பர் 8 முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பவர் பிளே முறை முதன் முதலாக அறிமுகப்படுத்தப் பட்டது.
உடை - வர்ண நிறம் அந்தந்த அணிகளுக்கு ஏற்ப.
மொத்த ஓவர் - 50
ஆகக் கூடிய ஓட்டம் - 377/2 (ஆஸ்ட்ரேலியா vs தென் ஆபிரிக்கா) குழு - A  
ஆகக்குறைந்த ஓட்டம் - 77 (அயர்லாண்ட் vs இலங்கை)   
பதிந்த நிகழ்வு - கில்க்றிஸ்ட் 104 பந்துகளுக்கு 149 ஓட்டங்களை பெற்றார்.

2011 ம் ஆண்டு நடாந்த உலகக்கிண்ணம்

பங்குபற்ற உள்ள அணிகள் - 14
போட்டிகள் நாட்கள் - 41
போட்டி முறை - 2 குழுக்கள் 7 அணிகள் வீதம் போட்டியிட்டு தெரிவான 4 அணிகள் கால் இறுதிக்கு தெரிவாகும்.
மாற்றம் - சூப்பர் 8 முறை நீக்கப்பட்டு UDRS அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 
சூப்பர் ஓவர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உடை - வர்ண நிறம் அந்தந்த அணிகளுக்கு ஏற்ப.
மொத்த ஓவர் - 50

நன்றி
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் இத மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். என்வே உங்கள் ஓட்டுகளை தவறாது இட்டுவிட்டு செல்லுங்கள்

என்றும் அன்புடன்
அன்வாஸ் முகம்மத்.

2 comments: