Friday, February 25, 2011

Seashore Cricket

இது கிரிக்கட் திருவிழாக் காலம் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பமானதும் ஆங்காங்கே ஊருக்கு ஊர் உள்ளூர் கிரிக்கட் கோப்பை போட்டிகள் நடாத்துவது தானே நமது பண்பாடு . . . இதில் எத்தனை பேரானந்தம் நம்மூர் பசங்களுக்கு அந்த வாய்ப்பு இந்த வெளிநாட்டுக்கு வந்ததானால் இழக்கப்பட்டு விட்டதே என நான் பலமுறை வருந்திக் கொண்டாலும் இந்த வருடம் அந்த கனவை நிறைவு செய்து இருக்கிறது SEASHORE GROUPS எனும் எமது கம்பனி ஆம் அது கம்பனியில் உள்ள தொழிலாளர்களை குசிப்படுத்த வேண்டும் என நினைத்து ஒரு கிரிக்கட் சுற்றுப்போட்டியினை கம்பனியில் உள்ள தொழிலாளர்களுக்கு இடையே நடத்தி வருகிறது ...
ஆரம்ப போட்டியில் முதலில் 16 அணிகளை நாகவுட் முறையில் போட்டியிட செய்தது அதில் வெற்றி பெரும் 8 அணிகள் சூப்பர் 8 போட்டிக்கு தெரிவாகும் என்ற நிலமை தீர்மானிக்கப்பட்டது . .

அதன் அடிப்படையில் முதலில்
SEASHORE Trading, Sri Lanka Tamil Sports Club உடன் போட்டியிட்டு தோல்வியை தழுவியது
Sri Lanka Tamil Sports Club சூப்பர் 8 இற்கு தெரிவானது . .

Admin Eagles, Garage 11 Stars உடன் போட்டியிட்டு வெற்றி பெற்று சூப்பர் 8 இற்கு தெரிவானது ..

பின்னர் Seashore Waste Management, Injured Lions அணியை தோற்கடித்து சூப்பர் 8 இற்கு தெரிவானது .

அதே போல் ஏனைய அணிகளான
Doha Offenders
Mechanical - Antony
Mechanical
Qatalum
 போன்ற அணிகள் சூப்பர் 8 போட்டிக்கு தகுதி பெற்றது .

இன்று 2011/02/25 வெள்ளிக்கிழமை சூப்பர் 8 அணிகள் மோதும் சுவாரஸ்யம் கலந்த போட்டிகள் நடைபெற்றன . ..

அதில் விசேடமாக முதலில் நடைபெற்ற போட்டியான
Sri Lanka Tamil Sports Club இற்கும்
Waste Management இற்கும் இடையில் நடந்த போட்டியினை குறிப்பிடலாம் . .
முதலில் களத் தடுப்பில் இறங்கிய Sri Lanka Tamil Sports Club எதிரணியை
13 ஓவர் முடிவில் 48 ஓட்டங்களை குடுத்து அவர்களுக்கு தகுந்த நெருக்கடியை கொடுத்தது .
பேட்டிங்கில் பிரகசிக்கத்தவரிய Waste Management அணி களத்தடுப்பை மும்முரமாக்க முயன்றும் Sri Lanka Tamil Sports Club இன் அபார ஒட்டக் குவிப்பு மூலம் அது 5 ஓவர் மாத்திரமே முடிந்து இருக்கும் நிலையில் 2 விக்கட்டுகளை இழந்து 49 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கி கொண்டார்கள்

இந்த சுற்றுப் போட்டி அடுத்த வாரமும் தொடர இருக்கிறது
இப்போது Semi Final இற்கு தெரிவாகி உள்ள Sri Lanka Tamil Sports Club இற்கு எமது நல்லுதயம் சார்பாக வாழ்த்துக்கள் .

என்றும்
அன்புடன்
அன்வாஸ் முஹம்மத்.
நல்லுதயம் - ஆசிரியர்.

No comments:

Post a Comment